10, 12 வகுப்பு தேர்வு நடைபெறுமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது

தமிழக முதல்வர் விமான நிலையத்தில் பேச்சு

கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வு கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நீட் தேர்வை நடத்த வேண்டியதாகி விட்டது. இந்த தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 அரசு பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 படித்து முடித்த நிலையில் வெறும் 6 பேர் தான் மருத்துவ கல்வியில் சேர முடிந்தது. இந்தாண்டு 313 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஆன்லைன் ரம்மி குறித்த புகார் அடிப்படையில் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்ற பின்னர் மத்திய அரசு தான் நடைமுறைப்படுத்த வேண்டும். 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு நடைபெறுமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.