கோவையில் 426.9 மி.மீ மழை பொழிவு

கோவையில் நேற்று (17.11.2020) ஒரே நாளில் 426.9 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வால்பாறையை அடுத்த சின்கோனாவில் 60 மி.மீ மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் சில மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் கன மழை பெய்து வருகிறது. கோவையை பொறுத்தவரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி வருகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

வால்பாறை பிஏபி, 21 மி.மீ, வால்பாறை தாலுக்கா 20 மி.மீ, ஆழியார் 14.6 மி.மீ, சோலையார், 41 மி.மீ, பொள்ளாச்சி 31 மி.மீ, மேட்டுப்பாளையம் 10.3 மி.மீ, சின்கோனா 60 மி.மீ, சின்னக்கல்லார் 42 மி.மீ, சூலூர் 40 மி.மீ, கோவை தெற்கு 45 மி.மீ, கோவை தெற்கு 45 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 22.8 மி.மீ, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 34 மி.மீ,  என மொத்தம் 426.9 மி.மீ, மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 30.49 மி.மீ மழை பெய்துள்ளது.