ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்..

தமிழகத்தில் ஏப்ரல் 1-ந்தேதி ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படுகிறது. இதற்கான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிப்பதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, ’ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ முறையை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரேசன் கார்டுகளை ‘ஸ்மார்ட்’ கார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து ஏப்ரல் 1-ந்தேதி முதல் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.  சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படுகிறது.

பயனாளிகள் அந்தந்த ரேசன் கடைகள் மூலம் தங்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’களை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.