கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம் : கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு

திருடர்களை பிடிக்கும் விதமாக கண்காணிப்பு கோபுரம் அமைத்து கேமரா மூலம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கோவை : வருகிற 14-ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் அதனை முன்னிட்டு கடைவீதிகளில் புத்தாடை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக முண்டியடித்து செல்கின்றனர். இதன் காரணமாக அந்த சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் அதிகமான மக்கள் துணி வாங்க வரத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இனிவரும் நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி தீபாவளி திருடர்கள் மக்களிடம் இருந்து நகை, பணத்தை பறிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் கூட்டத்தில் திருடர்களை பிடிக்கும் விதமாக கண்காணிப்பு கோபுரம் அமைத்து கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.