சுதந்திர வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம்

தேசபந்து என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ், 1870ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் பிறந்தார்.

தீவிர அரசியலில் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். இவரை தன் அரசியல் குருவாகப் போற்றினார் சுபாஷ் சந்திரபோஸ்.

ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்து, 1922ஆம் ஆண்டு சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார்.

1923ஆம் ஆண்டு நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினரானார். 1924ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்று, சித்தரஞ்சன் தாஸ் மேயரானார். கிராமப் பஞ்சாயத்து, கிராம சுயாட்சி ஆகியவற்றை அப்போதே தனது ஐந்து அம்ச திட்டத்தில் கொண்டு வந்தவர் இவர் தான்.

சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள் மற்றும் இவர் திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். தன் ஈகை குணத்தால் ஏழையான இந்த வள்ளல், தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதி வைத்தார். இவர் 1925ஆம் ஆண்டு மறைந்தார்.