ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மதிமுக இளைஞர் அணி செயலாளர் கோரிக்கை மனு

மதிமுக இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தொடர்ந்து தற்கொலைகள் நடக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஆந்திர மாநில அரசு கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாக தடை செய்துவிட்டது. மீறி விளையாட்டை நடத்தினால் அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பல தற்கொலைகள் நடந்து விட்டது. மேலும் கோவையிலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டுமென்று மாநில அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.