விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் பதவியேற்பு விழா

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. கோவை காந்திபார்க் பகுதியில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாநகர மற்றும் மாவட்ட என இரு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் கோவை மாவட்ட தலைவராக பிரகாஷ், செயலாளர் தேவராஜ், அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மாநகர தலைவராக அஞ்சலி சீனிவாசன், செயலாளர் சிங்கராஜ், அவைத்தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏழை எளிய  மக்களுக்கு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து பல்வேறு சேவைகளை  செய்யவுள்ளதாக  தெரிவித்தனர். இந்த விழாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் கலந்து கொண்டனர்.