ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் : உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அரசு அலுவலர்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (02.11.2020) ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாத கடைசி வாரம் மற்றும் நவம்பர் மாத முதல் வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டு 27.10.2020 முதல் 02.11.2020 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி இன்று (02.11.2020) ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு அனைத்துதுறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘விழிப்புணர்வு வாரம்-2020”  என்ற சுவரொட்டிகளை கோவை மாவட்டத்திலுள்ள மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் நோக்கம் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் சிறப்பான சேவை செய்வதே ஆகும். பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை எளிய முறையில் விரைவாக சென்றடைதலே ஆகும்.