கிராமப்புற மாணவர்களுக்கு நாட்டிலேயே முதல்முறையாக 7.5 சதவீகித இட ஒதுக்கீடு

கோபியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாடே வியக்கும்படியாக தமிழக முதல்வர் அவர்கள் தமிழக மக்களுக்காக பல்வேறு நலப் பணிகளைத் திறம்பட செய்து, நல்ல  மாற்றங்களை உருவாக்கி சரித்திர முதல்வராக பவனிவருகிறார். தற்போது அவர், நாட்டிலேயே முதல்முறையாக 7.5 சதவீகித இட ஒதுக்கீட்டின் மூலமாக, 303 கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக சட்டம் இயற்றியுள்ளார். மேலும், இந்த ஆண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக, தங்களது  இரண்டாவது ஆண்டில் கூடுதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கும் விதமாக இந்த ஆண்டு புதிதாக படிக்கும் மாணவர்களுடன் சேர்த்து இதுவரை 9,438 பெயர்கள் ஆன்லைன் வகுப்பிற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.