தேவர் ஜெயந்தி: ராம் மோகன் ராவ் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா கோவை  இருகூரில் தேவரின் திருஉருவச் சிலைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவை விமான நிலையத்தில் டாக்டர் ஆர் எம் ஆர் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகள் இவருக்கு வரவேற்பளித்தனர்.

நாட்டுக்காகவும் சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை  டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை சார்பில் தமிழகம் முழுவதும் கௌரவிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மதுரையில் பிரம்மாண்டமான பேரணி நடத்தி முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது..

தொடர்ந்து மாவீரன் கட்டபொம்மன் நினைவிடம் ஆன கயத்தாரில் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. தற்போது முத்துராமலிங்க தேவர் 113 ஆவது ஜெயந்தியையொட்டி கோவையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஆர் எம் ஆர் பாசறை  நிர்வாகி தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் டாக்டர் ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதற்காக சென்னையில் இருந்து கோவை விமானம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் பாசறை நிர்வாகிகள் கோவை கிருஷ்ணராஜ் .. கௌதம், ஆனந்த பத்மநாபன் .திண்டுக்கல் கிருஷ்ணமூர்த்தி. விடுதலை களம் நாகராஜ் . தேக்கமலை பூபதி .சேலம் ஜெயக்குமார் பிரேம்குமார்  ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் வரவேற்பு பெற்று அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ராம்  மோகன் ராவ்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராம் மோகன் ராவ் பேசுகையில், அரசு பணியில் சேர்ந்தவுடன் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிட வாய்ப்பு கிடைத்தது. பெருமை மிக்க தலைவர் மாவட்டத்தில் பணி செய்வது குறித்து மகிழ்ச்சி அன்று முதல் அவர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நாளை மறுதினம் அவரின் பிறந்த நாள் என்பதால் அதற்கு முன்பாகவே கௌரவிக்கப்பட வேண்டும் என்று இன்று (28.10.2020) மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளேன். தலைமைச் செயலாளருக்கு பணி நீட்டிப்பு குறித்து பேசக்கூடிய இடம் இது அல்ல. தலைமைச் செயலகத்தில் நடந்த வருமான வரி சோதனை குறித்து சரியான நேரம் வரும்போது சொல்லப்படும் என்று கூறினார்.