விஜயதசமி : குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெற்றோர்

கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று (26.10.2020) நடைபெற்றது

நவராத்திரி பெருவிழாவின் ஒன்பதாம் நாள் தொழில்களை போற்றும் நாளாகவும் அதற்கடுத்த நாளான இன்று விஜயதசமி என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வித்யாரம்பம் என்ற குழந்தைகளுக்கு எழுத்தறிவுத்தல் செய்தல் வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சியாகும். அதன்படி, கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்க பச்சரிசியில் தாய்மொழியின் முதல் எழுத்தான “அ” என்ற எழுத்தையும் மற்றும் “ஓம்” என்ற வார்த்தைகளையும் எழுதினர்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.