கோவை மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு நல்லாசி வழங்கிய அமைச்சர்

கோவை  அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், இளைஞர் பாசறை, மருத்துவ அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட சார்பு அணிகள் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய பகுதி, வார்டு நிர்வாகிகள் ஆகியோர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் பேசுகையில், மகளிர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தற்போது வகிக்கின்ற பதவிகள் பொறுப்புகள் மிக முக்கியம் எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்த இந்த இயக்கத்திற்கு என்ன செய்ய முடியும் என சிந்தித்து செயல்பட வேண்டுமெனவும், வார்ட் செயலாளர் மாவட்ட பொறுப்புகள் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென கூறிய அவர்

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. ஆகையால் நாம் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்

பொதுமக்களை நேரில் சந்தித்து, அம்மாவின் திட்டங்களை அனைவருக்கும் எடுத்துரைக்கவேண்டும். அம்மா திட்டம் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் 50 ஆண்டு கால வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் நாம் கொடுத்துள்ளோம் என கூறினார்..