விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நாளை (23.10.2020) இணையதளம் வழியாக காணொலிக்காட்சி மூலம் நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்கென அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த சில மாதங்களாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. தற்சமயம் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுகாண இணையவழியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தில் வரும் 23.10.2020 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இணையதளம் வழியாக காணொலிக்காட்சி  மூலம்  நடைபெறவுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை இணைய வழியாக தெரிவித்து தீர்வு காணும் வகையில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படும்.  விவசாயிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இணையவழியில் நடைபெறும் இந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு சம்மந்தப்பட்ட துறைகளின் தலைமை அலுவலர் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

கோயம்புத்துர் மாவட்ட விவசாயிகள் இந்த இணையவழி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை முறையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.