ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிப்பு

ஒத்த செருப்பு அளவு 7 பார்த்திபன் தயாரித்து,எழுதி இயக்கி, தனி ஒருநபர் மட்டுமே திரையில் வரும் படி இவரே நடித்துள்ளார். இப்படம் வெளியான பொழுது தமிழ் சினிமா வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒரு படமாக அமைந்திருந்தது.

இப்படத்தை பார்த்திபன் தனது தயாரிப்பு நிறுவனமான, பயோஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸின் கீழ் தயாரித்து ஒரு நபரே திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து தயாரித்ததற்காக இந்த படம் ஆசிய சாதனைகள் புத்தகத்திலும் மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்திற்கு தற்பொழுது மத்திய அரசின் விருது அறிவித்திருப்பது தமிழ் திரையுலகை மேலும் ஒரு இந்திய அளவிலும் உலகளவிலும் உயர்த்தியுள்ளது.