தீயணைப்பு துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு

கோவையில் தீயணைப்பு துறையினர் வாகன பேரணியாக சென்று கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக பொதுமக்களிடையே கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தீயணைப்பு நிலைய வளாகத்தில் இருந்து இருசக்கர வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் வரிசையாக புறப்பட்டு கோவை மாநகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் தீயணைப்பு நிலையம் வந்தடைந்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலமாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், முகக்கவசங்கள் அணியவேண்டும், பொதுஇடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் போன்ற பல்வேறு பதாதைகளை கைகளில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.