சோஷியல் மீடியாவில் என்ட்ரி கொடுக்கவுள்ள சிம்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவரது படம் குறித்த அறிவிப்புகள், புதிய புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளிவரும்பொழுது அது சமூகவலைதளத்தில் அவரது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்படும்.

இவர்களுக்கு ஒரு திரைப்படம் சாராத ஒரு நற்செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அது அக்டோபர் 22-ம் தேதி தனது யூடியூப் சேனல் மற்றும் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா கணக்குகளை சிம்பு தொடங்க இருக்கிறார் என்பது தான். இதை அறிந்த ரசிகர்கள் சமூகவலைதளத்தில் #SilambarasanTR என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.