சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடலாம் சினிமா இல்லாமல் வாழ முடியாது

-இயக்குநர் மிஷ்கின்

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படம் பேய்மாமா. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று (19.10.2020) சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின், சக்தி சிதம்பரம் ஒரு சிறந்த இயக்குனர். இவரை 16 வருடங்களுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளரை சந்துக்கும் போது நான் அவரை சந்தித்தேன். இன்றும் அவர் புதுப்பட இயக்குநர் போல ஓடிக்கொண்டு இருக்கிறார். யோகிபாபுவை இதுவரை நேரில் பார்த்தது இல்லை. அவரிடம் எப்படிப் பேசுவது என்று சிந்திக்கும் போது, அவரே என்னிடம் நேராக வந்து, நான் உங்களின் ரசிகன் என்றார். இந்த எளிமை வாழ்நாள் முழுதும் அவரை நல்லா வைக்கும். இந்த 7 மாதங்களாக நாம் அனைவரும் பேயாகத்தான் இருந்தோம். இப்போது தான் மனிதர்களாக உலாவுகிறோம். அதற்கான காரணமாக இந்த விழாவும் படமும் இருக்கிறது. அதனாலே இந்தப் படமும் பெரியதாக வெற்றி பெற வேண்டுமென கூறி சாப்பாடு இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் சினிமா இல்லாமல் வாழ முடியாது. செத்துப் போய் விடுவோம். என்றார்.