இனி ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் சேவைகள் எதுவும் இடம்பெறாது

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பேஸ்புக் சேவைகள் எதுவும் இடம்பெறாமல் இருந்தது.

இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், இனி வெளியாகும் புதிய ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் நிறுவன செயலிகள் மற்றும் சேவைகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.

இதனால் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் பேஸ்புக் நிறுவன சேவைகள் மற்றும் செயலிகளை அவர்களாக இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.