இந்திய ராணுவத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்கான போட்டித்தேர்வு

இந்திய ராணுவத்தில் அலுவலராக நியமனம் பெற இந்திய ராணுவத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்கான போட்டித்தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு முன்னாள் படைவீரர் நல இயக்கத்தால் முன்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன. தற்போது பெருந்தொற்று கொரோனா பரவல் காரணமாக சிறப்பு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்த இயலாத நிலை உள்ளதால் மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழங்க உள்ளது.

எனவே மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள்  கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்த விபரத்தினை தெரிவிக்குமாறும், மேலும் பயிற்சி பெற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் www.exweletutor.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.

மேலும், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்