நீட் தேர்வில் 62வது இடம் பிடித்த வேலம்மாள் பள்ளி மாணவி

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ஸ்வேதா 720 மதிப்பெண்ணுக்கு 701 மதிப்பெண் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 62ம் இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரிய உறுப்பினர்களுக்கும் பள்ளி நிர்வாகம் வாழ்த்துகளை தெரிவித்தது.