சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில நிதி உரிமைக்கு விரோதமாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நடப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்துகொண்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.