ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு கல்லூரியின் முதல்வா் மற்றும் செயலா் பி.எல். சிவக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்பு விழாவில் அவர் பேசுகையில், அப்துல் கலாம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், இந்திய செயற்கைகோள் திட்டத்தின் சாதனைகள், இந்தியா 2020 திட்டம், இந்திய இளைஞர்கள் மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை போன்ற சிந்தனைகள் மூலம் இளைஞா்களின் மனதில் என்றென்றும் அவர் விடிவெள்ளியாகத் திகழ்ந்து கொண்டிருப்பார் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வா் தீனா, முதன்மையா்கள், துறைத்தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் என சமூக இடைவெளியுடன் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியைக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா்களான பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனா்.