கூகுள் மேப்பில் வாகன ஐகான்கள்

கூகுள் மேப், பலரும் பாதை கண்டறிய பயன்படுத்தும், அதுவும் சிறு சிறு சத்துக்களாக இருந்தாலும், நீண்ட நெடிய பயணம் என்றாலும் பயன்படுத்த கூடிய ஒரு செயலியாக உள்ளது. இந்த செயலியில் கூகுள் நிறுவனம் மேலும் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது Vehicle Icon எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வசதி ஏற்கனவே iOSசாதனங்களுக்கான கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அன்ராயிட் சாதனங்களுக்கான கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் தற்போது அம்புக்குறி வடிவில் காண்பிக்கப்படும் வாகனத்தின் ஐகானை சிவப்பு நிற கார், பச்சை நிற பிக்கப் ட்ரக் மற்றும் மஞ்சள் நிற SUV கார் என்ற ஐகான்களிற்கு மாற்ற முடியும்.