இந்துஸ்தான் கலை கல்லூரியில் உலக கை கழுவும் தின விழிப்புணர்வு

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்.சி.சி, உடற்கல்வி துறை மற்றும் மைக்ரோபயாலஜி துறை சார்பாக கல்லூரி வளாகத்தில் உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒரே நேரத்தில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையவழியில் இணைந்து தங்களது இல்லத்தில் இருந்து கைகளை கழுவி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் பொன்னுசாமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும் இதில் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கை கழுவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநரும், தேசிய மாணவர்படையின் ஒருங்கிணைப்பாளருமான கருணாநிதி மற்றும் மைக்ரோபயாலஜி துறையின் தலைவருமான லாலிகிரெதர் செய்திருந்தனர்.