கே.பி.ஆர் கலை கல்லூரி மற்றும் பட்டயக் கணக்காளர் மற்றும் நிறுவனச் செயலர் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் “புரிந்துணர்வு ஒப்பந்தம் – பட்டயக் கணக்காளர் மற்றும் நிறுவனச் செயலர்” தொடர்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், பொள்ளாச்சி ஈஸ்வர் அகாடமியின் இயக்குநர் வித்யா பிரபு கலந்துகொண்டு கல்லூரியுடன் பட்டயக் கணக்காளர் மற்றும் நிறுவனச் செயலர் தொடர்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டார். பட்டயக் கணக்காளர் மற்றும் நிறுவனச் செயலர் குறித்தானத் தேர்வு முறைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். CA/CMA/CS பற்றிய விழிப்புணர்வையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறினார்.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறை முதன்மையர் குமுதா தேவி அறிமுக உரை வழங்கினார். வணிகவியல் துறைப் பேராசிரியை தனலட்சுமி வரவேற்புரையும் சரண்யா நன்றியுரையும் வழங்கிய  இந்நிகழ்வில் 70 நபர்கள் கலந்து கொண்டுப் பயனடைந்தனர்.