தி.மு.க முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

கோவை மேற்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மற்றும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் திருவிழா தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வழியாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோவை மேற்கு மாவட்ட தி.மு.க.சாய்பாபா காலனி பகுதி சார்பாக சங்கனூர் சாலையில் உள்ள ஆர்.கே.திருமண மண்டபத்தில் சமூக விலகலை பின்பற்றி அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர். 10,11,12,13,14,44 மற்றும் 45 என ஏழு வார்டுகளுக்கு உட்பட்ட சாய்பாபாகாலனி பகுதி கழக பொறுப்பாளர் கே.எம்.ரவி தலைமையில் நடைபெற்ற இதில் வார்டு செயலாளர்கள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், பகுதி கழக பொறுப்பு குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் சரவணம்பட்டி பகுதியில் கோவை மேற்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் பையா கவுண்டர்  என்ற ஆர்.கிருஷ்ணன் தலைமையில் இணைய வழியாக நடைபெறும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கு அனைவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.