அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் கல்வி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் வர இன்னும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் கல்வி கற்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்களில் மொத்தம் 1.5 லட்சம் குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இச்சூழலில், இம்மாதமும் தொடர்ந்து வாட்ஸ்-அப் மூலமாகவே கற்பித்தல் பணி தொடர்வதாக, ஒருங்கிணைந்த மாவட்ட குழந்தைகள்‌ வளர்ச்சி திட்ட அலுவலர்‌ மீனாட்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘‘அங்கன்வாடி மையங்கள் மூலம் வாட்ஸ் ஆப் குழு ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இம்மாதமும் வாட்ஸ் ஆப் மூலம்  குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழந்தைகளும் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர்,’’ என்றார்.