ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவன தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான பரிசோதனையை ஜான்ஸன்&ஜான்ஸன் நிறுவனம் நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது. பரிசோதனையாளர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனையை நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருந்த ஜான்ஸன்&ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசி 60,000 பேருக்கு செலுத்தப் பட்டிருந்தது. கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் முதல்முறையாக அதிக அளவில் பரிசோதனையாளர்களுக்கு செலுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.