30 ரூபாயில் 3 லேயர்கள் கொண்ட முகக்கவசம் அறிமுகம்

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உயர்தர குறைந்த விலையிலான ஒன் இந்தியன் முகக்கவசம் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் நோய் தொற்றிலிருந்து பொது மக்கள் தங்களை காத்து கொள்ள முகக்கவசங்கள் கட்டாயம் அணிய தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சந்தைகளில் பல்வேறு விதமான முகக்கவசங்கள் தொடர்ந்து விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் உயர் தரத்தில் குறைந்த விலையில் ஒன் இந்தியன் நிறுவனம் சார்பாக ஃபேஸ் மாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

இதில் ஒன் இந்தியன் ஃபேஸ் மாஸ்க் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சிரில் ஆண்டணி பேசுகையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை எளிய பொதுமக்களுக்கு மூன்று மற்றும் ஆறு லேயர்கள் கொண்ட முகக்கவசங்கள் ஒன் இந்தியன் ஃபேஸ் மாஸ்க் நிறுவனம் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவ துறைகள் மற்றும் அனைத்து மருத்துவ கடைகளையும் கிடைக்கும் வகையில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சேவையாக தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட 3 மற்றும் 6 லேயர்கள் கொண்ட முகக்கவசங்கள் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையிலும் மிக குறைந்த விலையான 30 ரூபாயில் கிடைக்கும் வகையில், தரமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.