ஆனைகட்டி தொழிற்பயிற்சி சேர்க்கை அறிவிப்பு

ஆனைகட்டி (பழங்குடியினர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான சேர்க்கை எதிர்வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 2-ம் கட்டமாக நடைபெற உள்ளது என கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், ஆனைகட்டியில் பழங்குடியினருக்கு தனியாக 2019ம் ஆண்டு முதல் இயங்கிவரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2020ம் ஆண்டுக்கு ஆன 2ம் கட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன, எனவே 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இரு பாலரும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனைகட்டி (பழங்குடியினர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் பொருத்துநர், மின்சாரப்பணியாள், கம்மியர் மோட்டார் வண்டி ஆகிய தொழிற் பிரிவுகளுக்கும், 8ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் கம்பியாள் பற்றவைப்பவர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கும் சேர விண்ணப்பிக்கலாம்.

ஆனைகட்டி (பழங்குடியினர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவோர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சி கட்டணம் எதுவும் இல்லை . தமிழக அரசால் முற்றிலும் இலவசமாக தொழிற்பயிற்சி வழங்கப்டுகிறது. விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி வழங்கப்படும். இலவச பஸ் பாஸ் வசதி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் பயிற்சி நிறைவு செய்யும் அனைத்து பழங்குடியின பயிற்சியாளருக்கு உடனடி வேலைவாய்ப்பு தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுகிறது.

பழங்குடியினருக்காக 2020 முதல் தனியாக செயல்படும் தொழிற்பயிற்சி விடுதியில் சேரும் அனைத்து பழங்குடியின மாணவர் மற்றும் மகளிர்க்கு இலவச உணவு மற்றும் உறைவிட வசதி செய்து தரப்படும்

கூடுதல் விவரங்களுக்கு 90809 81805, 94421 75780, 99651 03597 என்ற அலைபேசிக்கு தொடர்புகொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.