கேபிஆர் கலை கல்லூரியில் வணிகச் சட்டம் குறித்த சிறப்புரை நிகழ்வு

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் வணிகச் சட்டம் குறித்த சிறப்புரை நிகழ்வு இணைய வழியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் உதவி மேலாளர் சாமிராஜ்  சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு தனது அனுபவங்களை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார்.

மேலும், மாணவர்களின் திறமைகளையும் அவற்றை வெளிப்படுத்தும் பண்புகளையும் உற்சாகப்படுத்தும் விதமாக எடுத்துக்கூறியதோடு, கடின உழைப்பு, நல்ல அறிவு சார்ந்த அனுபவம் இவை இரண்டும் எப்பொழுதும் ஒரு மனிதனை சிறப்பிற்குரியவராக  மாற்றுகிறது என்று எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் வரவேற்புரையை B.COM(CA) இரண்டாமாண்டு மாணவன் ஜதவேதாஸ் வழங்கினார், தொடர்ந்து வணிகவியல் துறை  முதன்மையர் குமுதா தேவி சிறப்பு விருந்தினரின் அனுபவங்களையும் அவர், தன் ஓய்வு காலத்தில் சட்டக்கல்லூரியில் மாணவராகச் சேர்ந்துப் பட்டம் பெற்றதையும் அதன் பயனாக வழக்குரைஞர்களுக்கு சட்டம் சார்ந்த 6 நூல்கள்  எழுதி வெளியிட்டமை குறித்தும் மாணவர்களிடையே எடுத்துக்கூறினார்.

வணிகவியல் துறைப் பேராசிரியர் தனலட்சுமி அவர்கள் தொகுத்தும் ஒருங்கிணைத்தும் வழங்கிய இந்நிகழ்வில் முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என 250 நபர்கள் கலந்து கொண்டுப்  பயன்பெற்றனர்.