அரசு மருத்துவமனைக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள N95 முகக் கவசம்

கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 B1 மற்றும் குறிச்சி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அரிமா சங்கம் இணைந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான N95 முகக்கவசம் மற்றும் முகசீல்டினை மாவட்ட அரிமா ஆளுநர் கருணாநிதி அரசு மருத்துவமனை மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர் பொன்முடி செல்வனிடம் வழங்கினார். இந்நிகழ்வு குறிச்சி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அரிமா சங்க தலைவர் கார்த்திகை வேலு தலைமையில், சங்க சர்வீஸ் கமிட்டீ சேர்மன் அரிமா தனராஜ் மற்றும் மாவட்ட அரிமா சங்க துணைச் செயலாளர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அரிமா சங்க மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், கார்த்திகேயன், வீரமணி, ஜெகநாதன், செல்வராஜ், கிரிஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.