கண் திறந்த தோற்றத்தில் மசகளிப்பாளையம் பழனி ஆண்டவர்

கோவையில் உள்ள பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் சுவாமி கண் திறந்த தோற்றத்தில் காணப்பட்டதால் ஏராளமான மக்கள் வியப்புடன் தரிசித்து சென்றனர்.

கோவை மசகளிப்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன் மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று காலையில் கோவில் நடை திறந்த உடன் மஞ்சள் அலங்காரத்தில் இருந்த முருகன், கண்களை சுற்றி வெள்ளை நிறத்திலும் நடுப்பகுதியில் கருப்பு நிறத்துடன் கண் திறந்த வண்ணம் காணப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் வியப்புடனும் ஆட்சியரித்துடன் வந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

இது குறித்து அக்கோவிலின் பூசாரி கூறுகையில், இந்த முருகன் கோவில் 60வருடமாக இங்கு இருப்பதாகவும், வழக்கம்போல் புரட்டாசி மாதத்தை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு வருகிறோம். அதே போல் இரண்டு நாட்கள் முன் மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு இன்று காலை நடையை திறந்தவுடன் கண் திறந்து காணப்பட்டது. இதை அறிந்து சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் தரிசனம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.