உங்கள் மாஸ்கை சுத்தப்படுத்திய பின்னும் பிறருடன் பகிரக்கூடாது!

கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதிலும் பரவியுள்ளது, அதை கட்டுப்படுத்தும் விதமாக இன்று பலரும் மாஸ்க் அணிந்து வெளியே வருகின்றனர். இதனால் நோய் பரவுவது சற்று குறைந்துள்ளது. பிறரின் எச்சில் மூலம் பரவும் இந்த கொரோனா, மாஸ்க் அணிவதன் மூலம் குறைந்த அளவு பரவலை ஏற்படுத்துகிறது. மனித கட்டமைப்பு எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும். நாம் பெரும்பாலும் நமது குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ அல்லது குழுக்களுடனோ வாழ்ந்து வருகிறோம். நாம் நம் உடமைகளை பிறருடன் பகிர்வது சாதாரணமாக ஒன்றாக உள்ளது.

அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்களில் தொடங்கி எலக்ட்ரிகல் கேட்ஜெட் வரை பலவற்றையும் நாம் பிறருடன் பகிர்கிறோம், பகிர்தலில் எந்த தவறும் இல்லை. இருப்பினும் இது ஒரு நல்ல முறை என்று நம்மால் கூறிவிட முடியாது. பிறருடன் பகிர்ந்து வாழ்வது மிகவும் நல்ல செயல் என்று நாம் கூறினாலும், இந்த கொரோனா வைரஸ் பகிர்தலை முற்றிலுமாக மாற்றி வைத்திருக்கிறது. உங்களின் உள்ளாடை அல்லது பல் துலக்கும் பிரஷ் ஐ எப்படி பிறருடன் பகிர்வதில்லையோ அதேபோலத்தான் மாஸ்க்கையும் நீங்கள் யாருடனும் பகிரக்கூடாது.

அது நன்றாக துவைக்கப்பட்டு இருந்தாலும் சரி அதை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் வெளியில் சென்று வந்த பின்பு நிச்சயம் முகமூடியின் மேல்புறத்தில் அதிகமான கிருமிகள், பாக்டீரியா மற்றும் வைரஸ் அடங்கியிருக்கும் வெளியில் சென்று வந்த பின்பு, கை கால்கள் மற்றும் முகத்தை நன்கு சோப்பை கொண்டு கழுவி விட்டால் அந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து தப்ப முடியும், இல்லை என்றால் நிச்சயம் அது பேராபத்தை ஏற்படுத்தும்.

உங்களுக்கென்று 3 அல்லது 4 முகமூடிகளை வைத்திருப்பது மிகவும் முக்கியம். உங்கள் மாஸ்க்குகளை ஒருமுறை பயன்படுத்திய பின்னர் நன்றாக துவைத்து வெயிலில் காயவைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும். ஒரு பொழுதும் பயன்படுத்திய மாஸ்க்கை துவைக்காமல் பயன்படுத்த வேண்டாம். உங்களது மாஸ்க்கை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம் கழுவிய பின்பு நன்றாக வெயில் படும் இடத்தில் அதைக் காய வைப்பது மிகவும் முக்கியம்.

கொரோனா எனும் கொடிய தொற்றிலிருந்து உங்களை காத்துக் கொள்ள இப்போது மட்டுமல்ல எப்போதும் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். இருமல், தும்மல் ஏற்படும் பொழுது முகமூடியை அகற்றாமல் இருப்பது முக்கியம். பொது இடங்களில் எச்சில் துப்புவது அபத்தமானது. அதனால் கூட தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முடிந்த அளவு உங்களை கூட்டங்களிலிருந்து விலக்கி வைத்துக் கொள்வது சிறந்தது. ஒரு வேலை கட்டாயமாக வெளியில் செல்ல நேரிட்டால் முகக்கவசத்தை கட்டாயமாக அணிந்து செல்லுங்கள்.