முத்தண்ணன் குளக்கரையில் காலி வீடுகள் இடிக்கும் பணி துவக்கம்

கோவை தடாகம் சாலை முத்தண்ணன் குளக்கரையில் உள்ள இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட காலியாக உள்ள வீடுகளை இடிக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.

இக்குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ள சூழலில், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சுமார் 1500 பேர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு குடிபெயர்ந்தனர். அந்த வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் காலியாக உள்ள 400 வீடுகளை இடிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வரும் சனிக்கிழமைக்குள் அனைத்து வீடுகளும் எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.