சங்கரா கல்லூரி பெண்களுக்கான நுண்கலை மன்ற போட்டிகள்

கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகம் கல்லூரியின் நுண்கலை மன்றத்தின் சார்பில் இணையவழியில் அனைத்துத்துறை மாணவிகளுக்கிடையேயான முகஓவியம் வரைதல் மற்றும் மெஹந்தி வரைதல் போட்டி நடைபெற்றது.

நுண்கலை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை திருச்செல்வி வரவேற்புரை வழங்கினார். இவர் பேசுகையில், ஒவ்வொருமாதமும் மாணவியரின் தனித்திறமைகளை தனித்துவமாக வெளிப்படுத்தும் பொருட்டு பலவிதமான போட்டிகள் நடத்தப்படும் என்றும் அதன் தொடக்க நிகழ்வாக முகஓவியம் வரைதல் மற்றும் மெஹந்தி போட்டிகள் நடத்தப்பட்டன என்றார்.

சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தனது தனித்திறமைகளை வெளிப்படுத்திய இந்த போட்டிகளை கல்லூரி முதல்வர் ராதிகா மற்றும் துணைமுதல்வர் பேராசிரியர் பெனார்டு எட்வர்ட் ஆகியோர்  துவக்கி வைத்தனர்.

இப்போட்டிகளுக்கான ஏற்பாட்டை நுண்கலை மன்ற உறுப்பினர்களான பேராசிரியர்கள் பவித்ரா மற்றும் ஜெயராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.