கோவை நடிகர் சங்கத்தின் ஆறாவது ஆண்டு விழா

கோவை மாவட்ட  நடிகர் சங்கத்தின் ஆறாவது  ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு திறமை வாய்ந்த மேடை கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கோவையில் நடிகர்,நடிகைகள், நாடக நடிகர்கள், துணைநடிகர், நடிகையர், மேடை நடிகர்கள் என நூற்றுக்கணக்கானவர்களை ஒன்றிணைத்து கோவை நடிகர் சங்கம் என்னும் பெயரில் கடந்த சில  ஆண்டுகளாக நடிகர்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொரோனா கால ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வந்த இத்தகைய கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் இந்த சங்கத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இச்சங்கத்தின் ஆறாவது ஆண்டு விழா கோவை போத்தனூர் சாலையில் உள்ள வெட்டிங் பேலஸ் எனும் தனியார் அரங்கில் நடைபெற்றது.

கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இதில், செயலாளர் ஜெயன் மற்றும் பொருளாளர் பூபேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ.க.வின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு  திறமை வாய்ந்த கலைஞர்களின் பல்வேறு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக இந்த ஆண்டிற்கான புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

முன்னதாக மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவை போற்றும் வகையில் அவரது சிறந்த பாடல்களை மேடை கலைஞர்கள் இணைந்து பாடினர். இந்த விழாவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.