பெண்களுக்கு கல்வி அளிப்பது எனது ஆசை அல்ல பேராசை- கே.பி ராமசாமி

கே.பி.ஆர் மில் லிமிடெட் மற்றும் கே.பி.ஆர் பெண் பணியாளர்கள் கல்வி பிரிவு இணைந்து காந்தி ஜெயந்தி விழா மற்றும் 2020-2021 கல்வி ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது.

கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி ராமசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆர். சுந்தரம், சிஏ, தேசிய ஒருங்கிணைப்பாளர், ‘சுதேசி ஜகரன் மஞ்ச்’ மற்றும் டி. என். சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் கே.பி.ஆர் மில் லிமிடெட் துணைத் தலைவர் சோமசுந்தரம், கே.பி.ஆர் பெண் பணியாளர்கள் கல்வி பிரிவின் முதல்வர் சரவணபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி ராமசாமி பேசுகையில், தமது லட்சியமாக தமது மில்களில் பணி புரிகின்ற ஆர்வமான பெண்களுக்கு அவர்கள் கல்வி பயில தம்மால் இயன்ற உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக கூறினார். மேலும் பெண்களுக்கு கல்வி அளிப்பது எனது ஆசை அல்ல பேராசை என்றார்.

தொடர்ந்து டி. என். சிவகுமார் பேசுகையில், கே.பி.ஆர் பெண் கல்வி பிரிவின் நோக்கத்தையும், அதை சிறப்பாக நடை முறைப்படுத்தி வருகின்ற, கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி அவர்களை பாராட்டி பேசினார். மேலும், 2020-2021 கல்வி ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவிகளை ஊக்குவித்தார்.

அவரைத் தொடர்ந்து, ஆர். சுந்தரம், தமது வாழ்த்துரையில் தனது பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மாணவிகளை பரவசப்படுத்தினார்.