ஆர்.எஸ்.புரம் மாதிரி சாலை அமைக்கும் பணி மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில், சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கௌலிபிரவுன் ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது மாநகரப்பொறியாளர் லட்சுமணன், தமிழ்நாடு மின்சாரவாரிய செயற்பொறியாளர் வைதீஸ்வரன், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.