கோவையில் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

– மாவட்ட ஆட்சியர்

கோவையில் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 7ம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் 1697 அங்கன்வாடி மையங்கள் மூலம் பல்வேறு  விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளபட்டது.

இதன் நிறைவுவில் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கீரை வகைகள், சோளம், தினை, குதிரை வாலி ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு பொருட்கள் வைக்கபட்டு இருந்தது.

நிறைவு விழா செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் தற்போது கொரோனா தொற்று பரவலாக உள்ள சூழலில் அதனை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 662 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது. முகாமில் சோதனை செய்தவர்களில் 8 ஆயிரத்து 262 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

தினமும் 16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சளி உள்ளிட்ட தொந்தரவுகள் உள்ளதா என கேட்டு அறியப்படுகிறது. 2 ஆயிரம் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கள பணியில் ஈடுபட்டு உள்ளனர். வரும் நாட்களில் தொற்றின் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.