சங்கரா கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி மன்றத் துவக்கவிழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் தொழில் முனைவோர் வளர்ச்சி மன்றத்தின் சார்பில் இணையவழியில் தொழில் முனைவோர் வளர்ச்சி மன்றத் துவக்கவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் தொழில் முனைவோர் வளர்ச்சி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்புரை ஆற்றி, தொழில் முனைவோர் மன்றப் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.

கல்லூரி முதல்வர் ராதிகா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சக புத்தாக்க மன்றத் தலைவரும், டி.எஸ்.டி-நிமேட் தலைமைத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான டெனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இவர் பேசுகையில், தொழில்முனை வோராவதற்குத் தேவையான அறிவாற்றல், திறமை, அனுபவம் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும், சுயதொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளாகப், புதுமையான யோசனைகளை உருவாக்குதல், அந்த யோசனைகளைத் தொழிலில் வணிகத்தில் செயல்படுத்துதல், தான் மேற்கொள்ளும் வணிகத்தில் நிலைத்திருத்தல் ஆகியவற்றைப் பற்றியும், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பற்றியும் வணிகம் செய்வோர் எவற்றைச் செய்ய வேண்டும் எவற்றைச் செய்யக் கூடாது என்பது பற்றியும் விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினரின் உரை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.