இலவச ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கிய நல்லறம் அறக்கட்டளை

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் மற்றும், , முகக்கவசங்கள்,சானிடைசர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அறிவுறுத்தலின் பேரில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசனின் வழிகாட்டுதலின் படி நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மசக்காளிபாளையம் பகுதியில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம், ஹோமியோபதி மாத்திரைகள், முகக்கவசங்கள், சானிடைசர் ஆகியவை வழங்கினர். மேலும் ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் உட்கொள்ளும் முறை மற்றும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.