ஜி.பி.வெங்கிடுவுக்கு அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் செங்கோட்டையன்

மறைந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.பி.வெங்கிடு அவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் திமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், மொழிப்போர் தியாகியுமான ஜி.பி.வெங்கிடு புதன்கிழமை அன்று உயிரிழந்தார்.

இவர் திமுக சார்பில் கோபி செட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 1996 முதல் 2001 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கோபியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உருவாவதற்கு பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.