டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி

டைம் பத்திரிகையின் ‘100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். ‘தலைவர்கள்’ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே அரசியல்வாதி பிரதமர் மோடி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மற்ற தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், 2020 அமெரிக்க தேர்தலில் டிரம்பிற்கு ஜனாதிபதி சவால் விடுக்கும் ஜோ பிடன், 2020 தேர்தலுக்கான அமெரிக்க ஜனநாயக துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென், ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல், மற்றும் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி பாசி ஆகியோர் இதில் இடம்பெற்று உள்ளனர்.