தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் இணையவழி காளான் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அக்டோபர் 5ஆம் தேதி அன்று (05.10.2020) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இணையவழி சிப்பிக்காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயிர் நோயியல் துறையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி அன்று காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நேர்முகப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதில், வரும் மாதம் அக்டோபர் 5ஆம் தேதி அன்று (05.10.2020) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இணையவழி சிப்பிக்காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இணையதள முகவரி www.tnau.ac.in யில் உள்ள இணைப்பில் 30.09.2020க்குள் பதிவு செய்து பயிற்சி கட்டணம் செலுத்தவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்

பயிர் நோயியல் துறை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர் – 641 003.

தொலைபேசி . 0422 – 6611336

மின்னஞ்சல் – pathology@tnau.ac.in