மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்

மாஸ்டர் திரைப்படம் தற்பொழுது அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உள்ளது. இது ஊரங்கு மற்றும் திரையரங்குகள் மூடல் உள்ளிட்ட காரணங்களால் ஓடிடி தளங்களில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. மேலும் இது குறித்து பல விவாதங்களும் நடைபெற்றுவந்தது.

இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இத்திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திரையரங்குள் திறந்த பின்னர் திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.