மருதமலை அடிவாரப் பகுதி புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் ரூ.4.09 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்.

கொங்கு மண்டலத்தின் முக்கிய திருத்தல அடையாளங்களில் ஒன்றாக கோவை மருதமலை திருக்கோயில் விளங்குகின்றது. மருதமலை திருக்கோயிலுக்கு உள்ளே மற்றும் வெளியிலிருந்து அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றன.  எனவே, மருதமலை அடிவாரப்பகுதியில்,  புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது, கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் இப்பகுதி மக்களின்  நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

அதனடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சியில், மருதமலை அடிவாரப்பகுதியில்  ரூ.4.09 கோடி மதிப்பில் 1.60 ஏக்கர் பரப்பளவில் புதியதாக அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையத்திற்கு சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சார் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

அதிநவீன வசதிகளுடன் அமையப்பெறும் இப்பேருந்து நிலையத்தில் தலா 7357 சதுர அடி பரப்பளவில் இரண்டாடுக்கு வணிக வளாகம்,  12 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்திக் கொள்ளும் வகையிலான பேருந்து நிறுத்துமிடம், தாய்பாலுட்டும் அறை, ஓட்டுநர், நடத்துநர் அறை, புறக்காவல் நிலையம், நேரக்காப்பாளர் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித் தனி கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு ஏறுதளம்,  பிரத்யேக கழிப்பறை பேருந்து பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, சாலை மற்றும் மின்சார வசதி என அனைத்து வசதிகள் அமையப்பெற்றிருக்கும் பேருந்து நிலையமாக இப்பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கணுவாய் தடாகம் சாலை பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் வடிகால் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.