இந்துஸ்தான் கலை கல்லூரி – பார்க் குளோபல் ஹெச் ஆர் சர்வீஸ் : புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் ஐடி துறை மற்றும் கோவை பார்க் குளோபல் ஹெச் ஆர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதன் மூலம் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி கிடைப்பதற்கும், மாணவர்கள் மார்க்கெட்டிங் டிஜிட்டல் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் பயிற்சிகள் வழங்கப்பட்டு, மாணவர்களின் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளவும் அதன் மூலம் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த பார்க் குளோபல் சர்வீஸ் கம்பெனியானது டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் மிகவும் முன்னோடியான கம்பெனி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் பொன்னுசாமி முன்னிலையில் ஐடி துறை தலைவர் சரவணன் மற்றும் பார்க் குளோபல் சர்வீஸ் கம்பெனியின் செயல் அதிகாரி  முன்னிலையில் கையெழுத்தானது. மேலும் பேராசிரியர்கள் பிரபு மெரினாள் மற்றும் கௌரி ஆகியோர் உள்ளனர்.