அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கல்லூரியின் முதன்மைச் செயலர் ஏ.எம்.நடராஜன் மற்றும் முதல்வர் அகிலா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் உயிரி மருத்துவப் பொறியியல் துறைத்தலைவர் ஸ்ரீலதா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையின் கோயம்புத்தூர் பிரிவின் முதன்மை மருத்துவ அதிகாரி மருத்துவர் டாக்டர் நரேந்திரன் ஆகியோர் மருத்துவமனையின் ஆய்வக சேவைப் பிரிவின் தலைவர் டாக்டர் ராம்மோகன் மற்றும் கல்லூரியின் உயிரி மருத்துவப் பொறியியல் துறைப் பேராசிரியர் ஆல்வின் ஞானதாஸ் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து முதல்வர் பேசுகையில், கல்லூரியின் உயிரி மருத்துவப் பொறியியல் துறையின் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனையின் சார்பில் சொற்பொழிவு அமர்வுகள் நடைபெறும் எனவும், மாணவர்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வருகை புரிய அனுமதி வழங்குதல் மற்றும் குறுகிய கால மருத்துவப் பயிற்சி வழங்குதல் ஆகியவை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் எனவும் கூறினார்.

மாணவர்கள் பெருமளவில் பயன் பெறக் கூடிய இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கே.பி.ஆர் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி பாராட்டினார்.