உலக அல்சைமர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செல்களை சிதைத்து, ஞாபக சக்தியைக் குறைத்து, நம்மை நமக்கே மறக்க வைத்துவிடும் நோய் தான், அல்சைமர். இந்நோய் 65 வயது தாண்டியவர்களை அதிகம் பாதிக்கிறது.

அல்சைமர் நோயைப் பற்றியும், அதனால் தொடர்புடைய முதுமை மறதியைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.